வெளிநாட்டவர்களால் தமிழர்களுக்கு ஆர்வத்துடன் பழக்கப்படும் விளையாட்டு

Report Print Dias Dias in சமூகம்

திருகோணமலையில் முன்னாள் சுவிஸ் தேசிய இளையோர் பயிற்றுனரினால் 40 பாடசாலை மாணவர்களுக்கான பூப்பந்தாட்ட இலவச பயிற்சிப்பட்டறை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை உள்ளரங்கில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதியும், ஜூலை மாதம் 01ஆம் திகதியும் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் திருகோணமலை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் நிலோஜனின் ஒழுங்கமைப்பில் இப்பயிற்சிப்பட்டறை நடைபெற்றுள்ளது.

இப்பயிற்சிப்பட்டறைக்கான ஆரம்ப ஒழுங்குகளை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஸ்தாபகர் கந்தையா சிங்கமமும், உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் தொழில்நுட்ப ஆலோசகர் ரோமன் பேச்சசும் முன்னெடுத்திருந்தனர்.

இலங்கைக்கு வருகை தந்திருந்த சுவிஸ் நாட்டின் முன்னாள் தேசிய இளையோர் பயிற்றுனர் தோமஸ் ரிச்சர்ட்டும், அவரது துணைவியாரான ரிச்சர்ட் பிரிஸ்காவும் இணைந்து பூப்பந்தாட்ட பயிற்சிப்பட்டறையை மேற்கொண்டிருந்தனர்.

வித்தியாசமான அணுகுமுறையிலும் மிகவும் நுணுக்கமாகவும் சிறப்பாகவும் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில் கலந்துக் கொண்ட 40 பாடசாலை மாணவர்களும் மிகவும் உற்சாகத்துடன் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers