மன்னார் தொங்குபாலத்தில் பயணிப்பவர்களுக்கு நேர்ந்துள்ள நிலை

Report Print Theesan in சமூகம்

மன்னார், தொங்குபாலத்தில் பயணிப்பவர்கள் அச்ச நிலையை எதிர்கொண்டுள்ளதுடன் பாலம் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பாதுகாவலர்கள் இன்றிக் காணப்படுவதால் செல்லும் சுற்றுலாப்பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மன்னார் தொங்குபாலம் பல வருட வரலாற்றினைக் கொண்டுள்ளது. மன்னாரிலுள்ள பல்வேறு வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்லும் தமிழ், சிங்கள, முஸ்லிம் சுற்றுலாப்பயணிகள் தமது குடும்பத்தினருடன் தொங்குபாலத்திற்குச் சென்று அங்குள்ள இயற்கை அழகுகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.

தொங்குபாலத்தில் நடைபாதையில் அமைக்கப்பட்ட தகட்டின் ஒரு பகுதி திறந்து காணப்படுகின்றது.

இதனால், அப்பாலத்தைக் கடந்து செல்லும் பொதுமக்கள் பாலத்தில் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

வடமாகாணங்களிலிருந்து பல திசைகளிலுள்ள பல்வேறு பாடசாலைகளிலிருந்து சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும் மாணவர்கள் இவ்வாறு பிரசித்தி பெற்ற இயற்கை வளங்களுக்குக் கூட்டிச் செல்வது வழமை. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பான சுற்றுலாத் தளங்களாக அமைத்துக்கொடுக்க வேண்டியது இப்பகுதிக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிகளின் கடமையாகும்.

பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஆறு காணப்படுகின்றது. ஆற்றைக்கடந்து செல்லும்போது பாதுகாப்பு வேலிகள் பாதுகாப்பானதாகவும் இல்லை இவ்வாறு அழிந்து செல்லும் பிரபல்யமான சுற்றுலா மையங்களை அழகுபடுத்தி மாகாணத்தை வருமான துறையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இதன் போது பாதுகாப்பினை பலப்படுத்தி இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சுற்றுலாப்பயணிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Latest Offers