20 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து விசாரணை

Report Print Kamel Kamel in சமூகம்

இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் 20 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம் 20 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கடந்த 4ஆம் திகதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த கூற்று தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிஸ்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Latest Offers