உள்ளூர்களில் போசாக்கு குறைபாடுகள் ஏற்பட இதுதான் காரணம்! சிறீதரன்

Report Print Yathu in சமூகம்

எமது தாயகப் பிரதேசத்தில் கிடைக்கின்ற உற்பத்திகளை உள்ளூரில் பயன்படுத்தாது வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்வதனால் போசாக்கு குறைபாடுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சியில் அமைந்துள்ள விவசாயப் பயிற்சிக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ் உள்ள நீர்ப்பாசனத்திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், விவசாயத்திணைக்களம், ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் விவசாயிகளுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று பகல் நடைபெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்டத்தின் நீர்ப்பாசன அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விவசாயம் கால்நடை அபிவிருத்தி பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதில் கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞான் சிறீதரன்,

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கீழ் புழுதியாறு, ஆனைவிழுந்தான் குளம் போன்ற குளங்கள் நீரப்பாசனத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவந்து அதன் கீழுள்ள விவசாயிகளின் பயிர்செய்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

மாவட்டத்தின் பெரிய வளமாகவும் விவசாய செயற்பாடுகளுக்குச் செயற்பாடுகளுக்கு துணையாகவும் இருந்த வட்டக்கச்சி விவசாயப்பண்ணை இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை இதற்காக பல போராட்டங்களை செய்திருக்கின்றோம்.

அபிவிருத்திகளுக்காக நிதிகள் செலவிடப்பட்டிருக்கின்றன. அதில் எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லை. மத்திய மாகாண அரசுகள் என்ற அடிப்படையில் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இழுபறி நிலையில் இருக்கின்றன.

கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இல்லை. எமது உற்பத்திகளின் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், எங்களுடைய பிரதேசங்களில் பிடிக்கப்படுகின்ற பெருமளவான மீன் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் என்பன உள்ளுரில் பயன்படுத்தப்படாமல் வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் போசாக்கில் வீழ்ச்சி காணப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு துரித அபிவிருத்தி செயலணியின் வடக்கிற்கான இணைப்பாளர் இறேனியஸ் செல்வின், வடமாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பானப் பொறியியலாளர்கள், கால்நடைவைத்திய அதிகாரிகள், விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers