நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடியான தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபைக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்படையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சார சபைக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் வழங்க மறுத்துள்ளதால், மின் உற்பத்தியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடு தழுவிய ரீதியில் 1 மணி நேர மின்சாரம் துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியம் வரை குழாய் இடும் நடவடிக்கையின் போது மோதரை பிரதேசத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கு உரிய தீர்வு காணாவிட்டால் மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இதன்படி கடந்த மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சாரசபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்தது.

எனினும் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என மின் சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest Offers