பொருளாதார காரணிகளுக்காக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் உயர்வு

Report Print Kamel Kamel in சமூகம்

நாட்டில் பொருளாதார காரணிகளின் அடிப்படையில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளன.

குடும்பப் பிணக்குகள், காதல் தோல்வி மற்றும் குணமாக்க முடியாத நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களே இலங்கையில் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டனர்.

எனினும் கடந்த மூன்றாண்டுகளில் பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகளவில் ஆண்களே தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டில் 3281 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers