திக்கம் பகுதியில் போதை பொருளுடன் ஒருவர் கைது! தேடும் நடவடிக்கையில் பொலிஸார்

Report Print Sumi in சமூகம்

பருத்தித்துறை - திக்கம் பகுதியில் 145கிலோ கேரளா கஞ்சா காங்கேசன்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா வைத்திருந்த நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் வடமராட்சி பருத்தித்துறை திக்கம் பகுதியில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரிய தலைமையிலான பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பொதி செய்யப்பட்ட நிலையிலே, மோட்டார் சைக்கிளிலை மறித்து பிடித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்துடன் 27 வயதுடைய ஒருவரே பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றையவர் தப்பி ஓடியதால், மற்றைய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், கைதுசெய்த நபரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers