நீராட சென்ற நிலையில் காணாமல் போன யுவதி சடலமாக மீட்பு!

Report Print Gokulan Gokulan in சமூகம்

யட்டியாந்தோட்ட மீகஹவெல்ல பகுதியில் உள்ள யுவதி ஒருவர், களனி கங்கைகையில் நீராட சென்று காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி இன்று காலை சடலமாக மீட்கபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை குறித்த யுவதி நீராட சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதிலும் யுவதி கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை கடற்படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யட்டியாந்தோட்ட மீகஹவெல்ல பகுதியை சேர்ந்த 18 வயதுடைய ஜோன் ஞானமேரி என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers