வெடிகுண்டு அச்சத்தால் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பதற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் வெடிகுண்டு புரளியால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காலி, கோனாபீனுவல ஆரம்ப பாடசாலையில் வெடிகுண்டு உள்ளதாக கட்டுக்கதை பரவியமையினால் அந்த பாடசாலையில் கற்கும் மாணவர்கள் அனைவரினதும் பெற்றோர் பாடசாலைக்குள் நுழைந்துள்ளனர்.

அத்துடன், பாடசாலைக்குள் பலவந்தமாக பெற்றோர் நுழைந்து மாணவர்களை அழைத்து செல்ல முயற்சித்தமையினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

போலியான தகவல்கள் அச்சமடைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை தங்களிடம் அனுப்புமாறு அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த தெலிகட பொலிஸ் பொறுப்பதிகாரி, பாடசாலைக்கு போதுமான பாதுகாப்ப உள்ளாக குறிப்பிட்டுள்ளனர். எனினும் அதனை ஏற்க பெற்றோர் மறுத்துள்ளனர்.

உடனடியாக பொலிஸ் அதிகாரிகள் களத்தில் இறங்கி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அங்கு சந்தேகத்திற்குரிய எந்தவொரு பொருளும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் பாடசாலை நிறைவடையும் வரை மாணவர்களை அனுப்ப முடியாதென பொலிஸார் அறிவித்த நிலையில் பாடசாலை நிறைவடையும் வரை பெற்றோர் பாடசாலைக்கு வெளியே அமர்ந்து மாணவர்களை அழைத்து சென்றுள்ளனர்.

இதேவேளை தென்னிலங்கையில் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்த சில தரப்பினர் முயன்று வருவதாகவும் இதன் காரணமாக யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.