ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சு தகவல்

Report Print Kamel Kamel in சமூகம்

ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாத்தளையில் உயர் நீதிமன்ற கட்டடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீதிமன்றங்களில் சுமார் ஏழரை லட்சம் வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் சிறு குற்றச் செயல்களுக்காக சிறைக்குச் செல்லும் கைதிகள் பெரிய குற்றவாளியாக மாறியே வெளியே வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் நீதிபதிகளுக்கும், சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் சுயாதீனமான தீர்மானங்களை எடுக்கக்கூடிய பின்னணியை உருவாக்கிக்கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் யாரும் எதிர்பார்க்காத சில சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவத்துள்ளார்.

Latest Offers