வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Report Print Vethu Vethu in சமூகம்

காபன் வரியை இதுவரை செலுத்தாதவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவதற்குள் செலுத்தி முடிக்குமாறு நிதி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

மோட்டார் வாகனங்களுக்கு வருடாவருடம் பெற்றுக் கொள்ளப்படும் வருமான உத்தரவுப் பத்திரத்தின் போது, இந்த வருடம் முதல் காபன் வரியை அறவிடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எனினும் சில பிரதேச செயலகங்களில் இன்னும் அந்த வரியை அறவிடுவதற்கான முறைமையொன்று ஏற்படுத்தப்படவில்லை.

ஜனவரி முதல் இதுவரை விநியோகித்துள்ள வாகன வருமான உத்தரவுப் பத்திரத்துக்கு காபன் வரியை, பிரதேச செயலகங்கள் அறவிடவில்லை என நிதி அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

எவ்வாறாயினும் காபன் வரி அறவிட முடியாமல் போனவர்களிடமிருந்து இவ்வருட இறுதிக்குள் அந்த வரியை அறவிட முறைமையொன்றை தயார் செய்யுமாறு நிதி அமைச்சு சுற்றுநிருபம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுவரையில் காபன் வரி செலுத்தாமல் மோட்டார் வாகனங்களுக்கான வருமான உத்தரவுப் பத்திரங்களைப் பெற்றுள்ளவர்கள், எதிர்வரும் மாதங்களுக்குள் அந்த வரியை கட்டாயம் செலுத்த வேண்டி வரும் எனவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.