கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் அறிவிப்பு! நாளை முதல் 24 மணி நேரத்திற்கு...

Report Print Sujitha Sri in சமூகம்
1380Shares

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் 24 மணி நேரத்திற்கு குறைந்த அழுத்த நீர் விநியோகம் மற்றும் நீர்வெட்டு என்பன அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அந்த வகையில் நாளைய தினம் முற்பகல் 9 மணி முதல் அடுத்த நாள் முற்பகல் 9 மணி வரையான 24 மணி நேரத்திற்கு ஹோகந்தற பிரதேசத்தில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த கால இடைவெளியில் கொழும்பு, தெஹிவளை - கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவெல மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் இரத்மலானை, சொய்சாபுர தொடர்மாடி தொகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.