சேருநுவர பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - சேருநுவர பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் திருட்டுத்தனமான முறையில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஐந்து சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதுடன், மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஐந்து சந்தேகநபர்களையும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் ஏற்கனவே முன் குற்றங்கள் உள்ளனவா எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட டிப்பர் லொறி தற்பொழுது சேருநுவர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.