கொழும்பில் வைத்து இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட இளம் பெண்

Report Print Sujitha Sri in சமூகம்

கொழும்பில் வைத்து நேற்றிரவு இளம் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் கொழும்பு மத்திய வலய ஊழல் தடுப்பு பிரிவினரால் கொம்பனித்தெரு, வேகந்த வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 5.52 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபரான பெண் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதுடன், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.