நாட்டில் அதிகரிக்கும் வறட்சி: 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக 17 மாவட்டங்களில் சுமார் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மன்னர், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய இடங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பகுதிகளுக்கு குடிநீரை விநியோகிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பருவப்பெயர்ச்சி மழை பெய்யாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

இவரின் தகவலின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளோரின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைவாக யாழ்ப்பாணத்தில் 21,000 பேர், கிளிநொச்சியில் 5,000 பேர், முல்லைத்தீவில் 12,000 பேர், மன்னாரில் 18,000 பேர், வவுனியாவில் 39 பேர், திருகோணமலையில் 2,457 பேர், அனுராதபுரத்தில் 915 பேர், புத்தளத்தில் 10,435 பேர், மாத்தளையில் 4,399 பேர், பொலன்னறுவையில் 3,523 பேர், மட்டக்களப்பில் 23,518 பேர், கேகலையில் 160 பேர், மொனராகலையில் 340 பேர், இரத்தினபுரியில் 3,041 அம்பாறையில் 11,536 பேர், ஹம்பாந்தோட்டையில் 2,149 பேர் என மாவட்ட ரீதியான பட்டியலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.