ஆபத்தை எதிர்த்து யாழ். ஐந்து சந்திப்பகுதியில் இன்று திரண்ட முஸ்லிம் மக்கள்

Report Print Sujitha Sri in சமூகம்
1188Shares

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இன்று காலை ஒன்பது மணியளவில் முஸ்லிம் மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் யாழ். மாநகரசபையினால் ஐந்து சந்திப்பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறு கோாி நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,

யாழ். மாநகரசபை மின்கம்பங்களை பொருத்துவதாக பொய்யுரைத்து கதிா்வீச்சு கூடிய 5G தொழிநுட்ப கம்பங்களை நாட்டுகின்றது.

மனித உயிா்கொல்லியான அந்த கம்பங்கள் எமக்கு தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரினங்களுக்கு ஆபத்தான 5G கோபுரத்தை எதிர்ப்போம், வேண்டாம் வேண்டாம் 5G டவர் வேண்டாம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாக்கியிருந்தனர்.