இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணித் துணைச்செயலாளர் விசாரணைக்காக கொழும்புக்கு அழைப்பு!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் அணித் துணைச்செயலாளர் அருள்ஞான மூர்த்தி நிதாஞ்சன் பயங்கரவாதத்தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த சட்டபீட மாணவன் அ.நிதாஞ்சனை எதிர்வரும் 12ஆம் திகதி காலை 9.30மணிக்கு கொழும்பு புதிய செயலாளர் கட்டடத்தொகுதியில் நடைபெறவிருக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான அழைப்பு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஒப்பத்துடன் நேற்று நிதாஞ்சனுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.