பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை

Report Print Kamel Kamel in சமூகம்

அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அண்மையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இவ்வாறு பிணையில் விடுதலை செய்பய்பட்டுள்ளனர்.

தலா ஐந்து இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதிமன்றினால் இந்த பிணை வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த இருவருக்கு எதிராகவும் மனித படுகொலை குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியாது என கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிய விபரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் இருவருக்கு எதிராகவும் படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தி, குற்றவியல் சட்டத்தின் 296ஆம் சரத்தின் பிரகாரம் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர சட்ட மா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தது.

சட்ட மா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனை சர்ச்சைக்குரியது என நீதவான் லங்கா ஜயரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.