சுதந்திரம் கிடைக்கும் போது இலங்கை எப்படி இருந்தது?

Report Print Steephen Steephen in சமூகம்

மக்கள் உருவாக்கிய தலைவர்கள் ஆரம்பத்தில் இருந்து இதுவரை முழு நாட்டு மக்களுக்காகவும் குரல் கொடுக்கவில்லை என சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர்,

சுதந்திரம் கிடைக்கும் போது இலங்கை ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தது.

கல்வி மற்றும் சுகாதார துறைகளில் இலங்கை ஆசியாவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் இருந்தது.

அத்துடன் இலங்கையில் முன்னேற்றமாக ரயில்வே துறையும் ஆசியாவில் முதல் தர துறைமுகமும் இலங்கையில் இருந்தது.

எனினும், சுதந்திரத்திற்கு பின்னரே இலங்கை தோல்வியடைந்து பின்நோக்கி சென்றது எனவும் விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.