இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நால்வர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாலையூற்று, காந்திநகர் மற்றும் கூம்புகார் பகுதியை சேர்ந்த 22, 21 மற்றும் 20 வயதுடைய நால்வரே சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இளைஞரொருவருடன் உள்ள பழைய குரோதத்தின் காரணமாக குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் இணைந்து அந்த இளைஞனை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers