ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - ஏறாவூரில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர், முகாந்திரம் வீதியில் உள்ள வீடொன்றின் கூரையில் உள்ள நீர்தாங்கி ஒன்றினுள் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு இவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கூரையின் நீர்த்தாங்கியில் இருந்து 2 கைக்குண்டு மற்றும் 63 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கைக்குண்டை ஏறாவூர், புன்னக்குடா பகுதியில் விசேடஅதிரடிப்படையினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers