சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணிய மௌலவி வசமாக சிக்கினார்

Report Print Jeslin Jeslin in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த மௌலவி ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவினர் குருநாகல் ரஸ்நாயகபுர பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நுவரெலியா பிலக்பூல் மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த நபர் பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவை பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.