ஜனாதிபதி இங்கிலாந்துக்கு விஜயம்

Report Print Steephen Steephen in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ளார்.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் ஜனாதிபதி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேனவின் பட்டமளிப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இங்கிலாந்து விஜயம் செய்கின்றார்.

இதன் காரணமாகவே வழமையாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.