கிராமத்திற்குள் புகுந்த இராட்சத முதலை

Report Print Steephen Steephen in சமூகம்

அனுராதபுரம் கல்கிரியாகம மானேருவ என்ற கிராமத்திற்குள் புகுந்த முதலையை உயிருடன் பிடித்து அதனை இன்று கலாவெவ தேசிய பூங்காவில் உள்ள பலலுவெவ குளத்தில் விட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

8 அடி நீளமாக சுமார் 15 வயதான முதலையே இவ்வாறு கிராமத்திற்குள் புகுந்துள்ளது. கிராமத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் தண்ணீர் வற்றியுள்ளதால், உணவு தேடிச் சென்ற முதலை கிராமத்திற்குள் வந்துள்ளது.

இது குறித்து கிராமவாசிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். கிராமத்தில் உள்ள சிறார்கள உட்பட கிராமத்தவர்களுக்கு முதலையால் ஆபத்து ஏற்படாமல் தடுக்க கிராமவாசிகள் அதனை மரத்தில் கட்டிவைத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், முதலையை பாதுகாப்பாக பிடித்துள்ளனர். அதனை கொண்டு சென்று கலாவெவ தேசிய பூங்காவில் உள்ள பலலுவெவ குளத்தில் விட்டுள்ளனர்.