வித்துவான் மு.கணபதிப்பிள்ளை காலமானார்

Report Print Malar in சமூகம்

வித்துவான்கள் வரிசையில் இறுதியாக வாழ்ந்துவந்த வித்துவான் முருகேசு கணபதிப்பிள்ளை காலமானார்.

யாழ்.அல்வாய் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் லண்டனில் வைத்து தனது 98ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1940ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பேராசிரியர் தேபொ மீனாட்சி சுந்தரத்தின் மேற்ப்பார்வையில் தனது வித்துவான் பட்டத்தையும், புலவர் பட்டத்தையும் பெற்றார்.

அதன்பின்னர் பேராதனை லண்டன் பல்கலைக்கழகங்களிலும் பட்டங்களைப் பெற்றார்.

தமிழ் மட்டுமன்றி சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், பாளி ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.

தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் தனது ஆசிரியர் தொழிலை ஆரம்பித்திருந்தார்.

பின்னர் இலங்கையில் பிரபல கல்லூரிகளான பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்.இந்துக் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மற்றும் கொழும்பு புனித செபஸ்தியன் கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றியிருந்தார்.