பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான் விஜேவர்தன நியமனம்

Report Print Steephen Steephen in சமூகம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியா சென்றுள்ளதால், ருவான் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர் தன்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கியதாக ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நடந்த ஆசிய கடலோர பாதுகாப்பு படைகளின் பிரதானிகளின் மாநாட்டின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.