சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அசிஸ் பாஷாட் கைது!

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் மூலகர்த்தாவான சஹ்ரானுடன் கண்டி அருப்பொலையில் பயிற்சி பெற்றவர் என கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹம்மது முக்தர் அசிஸ் பாஷாட் என்ற இவர் இன்று பேராதெனியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சஹ்ரானுடன் ஹம்பாந்தோட்டையில் பயிற்சி பெற்றவர் என கூறப்படும் ஷாஹுல் ஹமீட் அப்துல்லாஹ் என்பவர் வெலிமடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்