ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமை சமவாயத்தின் நிறைவு தின விசேட நிகழ்வு

Report Print Rusath in சமூகம்

30 ஆண்டு வரலாற்றை பூர்த்திசெய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் நிறைவினை முன்னிட்டு விசேட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

நன்னடத்தை சிறுவர்பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் இந்த விசேட நிகழ்வு ஏற்பாடுசெய்திருந்தன.

மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வீ.குகதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர்.ரீ.கடம்பநாதன், வாழைச்சேனை ஆதார வைத்திய சாலை உளநல மருத்துவர் டாக்டர்.ஜூடி ஜெயகுமார், மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை பொறுப்பதிகாரி எஸ்.மணிவண்ணன் ஆகியோர் வளதாரிகளாககலந்து கொண்டுள்ளனர்.

சிறுவர் உரிமைகளும் மேம்பாடும் சட்டபாதுகாப்பு மற்றும் சிறுவர் நலன்கள் பற்றிய அறிவூட்டல்கள் வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றுள்ளது.

சமூக பொருளாதார, அரசியல், கலாசார, உளவியல், மற்றும் ஆண்மீகம் சகல துறைகளினதும் நிறைவான செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட சர்வதேச ஆவணமே ஐக்கிய நாடுகள் சபையின்சிறுவர் உரிமைகள் சமவாயமாகும்

பிள்ளைகளின் அதி உச்சநலனை பாதுகாத்தல், சிறுவர்களுக்கு பாரபட்சம் காட்டாமை, உயிர்வாழ்தலுக்கான உரிமைகளை வழங்குதல் சிறுவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் சிறுவர்உரிமைகள் சமவாயத்தின் கோட்பாடுகளாகும்.