பேஸ்புக் நிறுவனத்திடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

Report Print Sindhu Madavy in சமூகம்

பேஸ்புக் தொடர்பிலான போலியான தகவலை பேஸ்புக் சமூக வலைதளத்தின் ஊடாக பரிமாற்றிக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் யசிரு குருவிட்டகே இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

பேஸ்புக் தொடர்பில் வெளியிடப்படும் போலி தகவல்களை அடையாளங் காண்பதற்காக அந்த நிறுவனத்தினால் பல்வேறுபட்ட கணிணி கண்காணிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து மத, இன கலவரத்தை தூண்டும் வகையிலான போலி தகவல்களை வெயிட்டமை பேஸ்புக் முடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.