பல்கலைக்கழகம் ஒன்றில் கடும் மோதல் - 16 பேர் வைத்தியசாலையில்

Report Print Vethu Vethu in சமூகம்

ருஹுணு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக காயமடைந்த 16 பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஊழியர் ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உட்பட 14 பேர் உள்ளடங்குவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் உட்பட மாணவ தலைவர்கள் சிலர் தற்காலிகமாக தடை செய்யபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல முறை மாணவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அந்த தடையை நீக்குமாறு கோரி நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் வன்முறையாக மாறியுள்ளது. மோதல் இரண்டு தரப்பிற்கு இடையில் கைகலப்பாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers