ஆசிரியர் தாக்கியதாக தெரிவித்து மாணவர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கந்தளாய், அக்போபுர பண்டாரநாயக்க மஹா வித்தியாலய ஆசிரியர் தாக்கியதாக மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் நேற்றிரவு கந்தளாய், தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர் அதே பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயின்று வருபவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவர் தலை முடியை பாடசாலைக்கு பொருத்தமில்லாத விதத்தில் வளர்த்து வந்ததையடுத்து அதே பாடசாலையில் கற்பிக்கும் ஒழுக்க ஆசிரியர் பாடசாலைக்கு ஏற்றவிதத்தில் முடியை வெட்டிக் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

இதேவேளை மறுநாள் அம்மாணவன் முடியை வெட்டாமல் பாடசாலைக்கு வருகை தந்ததையடுத்து அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

அதனையடுத்து மாணவனின் முடியை ஒழுக்க ஆசிரியர் வெட்டிய வேளை அம்மாணவன் பெற்றோர்களிடம் ஆசிரியர் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து நேற்றிரவு அம்மாணவனை பெற்றோர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவருகின்றது.

ஆசிரியர், மாணவனை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்போபுர பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest Offers