தற்காலிக வீடு ஒன்று எரிந்து நாசம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், முத்துவிநாயகபுரம் முதலாம் கண்டம் பகுதியில் தற்காலிக வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியவில் நடைபெற்றதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு கசிவினால் இந்த தீ விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இதன்போது தற்காலிக வீட்டில் இருந்த அனைத்து உடமைகளும் எரிந்து சாம்பலாகி உள்ளன. தீவிபத்து நேர்ந்த வீட்டிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்டோரை அயலவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Offers