ஞானசாரவின் சிங்களத் தலைவர் யார்? மெதகம தம்மானந்த தேரர்

Report Print Kamel Kamel in சமூகம்

கலகொட அத்தே ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார் என அஸ்கிரியபீடம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார் என்பதனை தெளிவாக வெளிப்படுத்த வேண்டியது அவசிமானது என அஸ்கிரியபீட சிரேஸ்ட உறுப்பினர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஞானசார தேரரின் விடுதலைக்கு தாமும் பங்களிப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், தனது தலைவர் யார் என்பதனை கலகொட அத்தே ஞானசார தேரர் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் முஸ்லிம் நாடுகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தி கொண்டு இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய புத்திஜீவி பௌத்த பிக்குகள் ஒன்றிய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers