வவுனியாவில் யானைத் தந்த முத்துக்களுடன் ஒருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா - நெடுங்குளம் பகுதியில் சட்டவிரோத யானைத்தந்தம் முத்து இரண்டினை தன்வசம் வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பொஹஸ்வெவே பகுதியை சேர்ந்த 48 வயதுடைய காமினி வீரசிங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமல்கம பகுதியில் இவர் சட்டவிரோதமான முறையில் தன்வசம் வைத்திருந்த இரண்டு யானைத்தந்த முத்துக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்றைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers