நேற்றிரவு வசமாக சிக்கிய இளைஞர்கள்! திருகோணமலையில் சம்பவம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியின் யான் ஓயா பாலத்துக்கு அருகில் வைத்து நேற்றிரவு நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 600 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் புல்மோட்டை முதலாம் வட்டாரம் மற்றும் இரண்டாம் வட்டாரம் பகுதிகளை சேர்ந்த 21, 23 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவருகிறது.

குச்சவெளி பகுதியிலிருந்து WP AAE-1710 எனும் இலக்க முச்சக்கரவண்டியில் போதைமாத்திரைகளை இளைஞர்கள் கொண்டு சென்ற போதே சிக்கியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று குச்சவெளி சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers