கொழும்பில் பேருந்துக்குள் நடந்த கடும் மோதல்! திகைத்துப் போன பயணிகள்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் சாரதிக்கும், மற்றுமொரு குழுவுக்கும் இடையில் கடும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

138 கடவத்தை - புறக்கோட்டை வீதியின் பேலியகொடை பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 11 மணி அளவில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது வாய்த்தகராறு ஒன்றே இவ்வாறு பாரிய மோதலாக மாறியுள்ளது.

பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்ட வேளையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்தின் சாரதி இரும்பு ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை தாக்க சென்றுள்ளார்.

பின்னர் மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரும் பேருந்தில் ஏறி சாரதி மீது கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை பேருந்திற்குள் பயணித்தவர்கள் கையடக்க தொலைபேசி மூலம் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக பேருந்தில் பயணித்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக தெரியவருகிறது.

Latest Offers