மட்டக்களப்பிலுள்ள பிரபல உணவகமொன்றில் சற்று முன்னர் பாரிய தீ பரவல்

Report Print Kumar in சமூகம்

புதிய இணைப்பு

புனித மிக்கேல் கல்லூரிக்கு அருகில் உள்ள உணவகத்தி பரவிய தீ, படையினரும் பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்ததை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

உணவகத்தின் களஞ்சிய சாலை பகுதியிலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சேதவிபரங்கள் எதுவும் கிடைக்கவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பபு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள பிரபல உணவகமொன்றில் சற்று முன்னர் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

புனித மிக்கேல் கல்லூரிக்கு அருகில் உள்ள உணவகத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர், படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers