பேசாலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகிற்கு கொட்டிலுடன் தீ வைப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார், பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழை படகு கொட்டிலுடன் தீ வைத்து ஏரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஒரு தொகுதி வலைகளுடன் குறித்த கண்ணாடி இழை படகு கடற்கரையில் உள்ள தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் பேசாலை 7ஆம் வட்டார பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரான குறித்த படகின் உரிமையாளர் நேற்று இரவு பேசாலை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பேசாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers