திருகோணமலை மாணவர் படுகொலை விவகாரம்: சட்டமா அதிபர் அவசர பணிப்பு

Report Print Rakesh in சமூகம்

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரை சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தப் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 12 விசேட அதிரடிப் படையினரும், ஒரு பொலிஸ் அதிகாரியுமாக அரச படையைச் சேர்ந்த 13 பேரையும் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தின் பிரதான நீதிவான் எம். எச். மொஹமட் ஹம்சா கடந்த வாரம் விடுதலை செய்திருந்தார்.

இந்தத் தீர்ப்பை படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவுகள், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் மிகவும் வன்மையாகக் கண்டித்திருந்தனர்.

இந்தநிலையில், குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் மீள விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

Latest Offers