லொறி மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சாமிமலை மானெலி தோட்ட பகுதியில் லொறி ஒன்றில் மோதி 14 வயது சிறுவன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த சிறுவன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின் கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாமிமலை, ஹட்டன் பிரதான வீதியின் மானெலி பகுதியில் வீதி ஓரமாக விளையாடி கொண்டிருந்த குறித்த சிறுவன் மீது லிந்துலை பகுதியை நோக்கி பயணித்து கொண்டிருந்த லொறி மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் கைது செய்யபட்ட சாரதியை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers