லொறியுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த இளம் ஆசிரியர்

Report Print Thirumal Thirumal in சமூகம்

மொனராகலை கொழும்பு பிரதான வீதியில் ஹொரெம்புவகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் கும்புக்கென 7ம் ஏக்கர் பகுதியில் வசித்த 26 வயதான குசேலன் கேதிஷ்வரன் என்ற ஆசிரியரே உயிரிழந்துள்ளார்..

இந்த ஆசிரியர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளதோடு தற்போது அவர் அலியாவத்தை தமிழ் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார். வேகமாக பயணித்த மோட்டர் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியர் தனது வீட்டிலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவிலேயே இவ்விபத்துக்குள்ளாகியுள்ளார்.

உயரிழந்த ஆசிரியரின் சடலம் மொனராகலை வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதோடு, லொறி சாரதி கைது செய்யப்பட்டு மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

மொனராகலை பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers