பயனாளிகளை காட்டிக்கொடுத்துள்ள முகநூல் நிறுவனம்?

Report Print Steephen Steephen in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்க்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் முகநூல் பக்கங்களை நீக்கவும் தற்காலிகமாக தடுக்கும் நிலைமைகள் கடந்த சில மாதங்களாக இருந்து வருவதாக தெரியவருகிறது.

இலங்கையில் மட்டுமல்லாது, பல நாடுகளில் தொடர்ந்தும் வரும் அழுத்தங்கள் காரணமாக, முகநூல் சமூக வலையத்தளத்தை முறைப்படுத்தும் விதம் தொடர்பாக தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை முகநூல் நிறுவனம், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நாடுகளின் அரச பிரதிநிதிகள், தகுதியற்றவை என தீர்மானிக்கும் எந்த முகநூல் கணக்காக இருந்தாலும் அதனை நீக்க முகநூல் நிறுவனம் இணங்கியுள்ளது.

ஒரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய செயற்படுவது என்பது வேறு, அரசாங்கங்களுக்கு தேவையான வகையில் செயற்படுவது என்பது வேறொன்று. இதற்கு அமைய முகநூல் நிறுவனம் தனது பயனாளிகளை நாடுகளின் அரசாங்கங்களிடம் காட்டிக்கொடுத்துள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முகநூல் பக்கங்களை முறைப்படுத்துவது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் பணியாற்றும் சிலர் நபர்கள் எனவும் அரசியல் தேவைகளுக்கு அமைய அவர்கள் முகநூல் பக்கங்களை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest Offers