மாங்குளம் பகுதியில் கோர விபத்து! இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டுப்பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளத்திலிருந்து இன்று மாலை மல்லாவி நோக்கி பயணித்த கப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வடகாடு பகுதியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒருவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையிலும் மற்றையவரின் சடலம் மாங்குளம் வைத்திய சாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி மற்றும் மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மாங்குளத்தில் இருந்து வெள்ளாங்குளம் வீதியில் பயணித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வடகாட்டுப்பகுதியில் மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது

இதன் போது பாலிநகர் வவுணிக்குளத்தைச் சேர்ந்த ஜீவகுமார் ஜெனிஸ்குமார் (வயது-18) மற்றும் குனாளன் டிசாந்தன் (வயது-18) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Latest Offers