புகையிரதக்கடவை காப்பாளர்கள் நாடு தழுவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் பணி பகிஸ்கரிப்பு!!

Report Print Thileepan Thileepan in சமூகம்

புகையிரதக் கடவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வடக்கு, கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

குறித்த பணி பகிஸ்கரிப்பு தொடர்பான கடிதத்தை அந்ததந்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களினூடாக பொலிஸ் மா அதிபர் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜெ. றொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக புகையிரதக்கடவை காப்பாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு புகையிரதத் திணைக்களத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.

இதன்போது பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடும் காலங்களில் புகையிரதக்கடவை காப்பாளர்களாக பணியாற்றிய ஊழியர்கள் பொலிஸாரால் அச்சுறுத்தல் மற்றும் கட்டாய பணியில் ஈடுபடுத்தல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers