போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் விளக்கமறியலில்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை-புல்மோட்டை பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்று (10) குச்சவெளி சுற்றுலா நீதிமன்றில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து - புல்மோட்டை நோக்கி முச்சக்கர வண்டியில் சந்தேக நபர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது யான் ஓயா பாலத்துக்கு அருகில் புல்மோட்டை பொலிஸார் சோதனை நடத்தியபோது தம்வசம் 150 போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது தொடக்கம் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இச் சந்தேக நபர்கள் தொடர்பில் வேறு பொலிஸ் நிலையங்களில் முன் குற்றங்கள் பதியப்பட்டுள்ளதா என்பது பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Offers