கிங்ஷ்பெரி ஹோட்டல் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு கிங்ஷ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பயங்கர வாதியான மொஹமட் அஷான் முகமட் முவாராக் அல்லது அப்துல்லா என்ற சந்தேக நபர் தன்னியக்க குண்டுதாரியைப் போன்று தீர்மானத்தை மேற்கொள்வோர் என்று கோட்டை நீதவான் ரங்க திஷாநாயக்க இன்று தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“குற்ற சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குண்டுதாரியின் தலையின் ஒரு பகுதி மற்றும் குண்டு தாரியின் மகளான அபீவா அஷான் என்பவருடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு அமைவாக இந்த தலை சந்தேக குண்டுதாரியினது என்பது நீதிமன்றத்துக்கு அரச இரசாயன ஆய்வுப் பிரிவினால் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கைக்கு அமைவாக குண்டுதாரி சம்பவ இடத்தில் குண்டை வெடிக்க வைத்து தான் உயிரிழந்தார் என்று தீர்மானிப்பதாகவும் நீதவான் தெரிவித்தார்.

தன்னியக்க குண்டுதாரியின் வீட்டை பரிசோதித்த போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு அமைவாக 2 சந்தேக நபர்கள் கைது செய்யபட்டதாகவும், அவர்கள் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

இது வரையில் சம்பவத்துடன் தொடர்புபட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த இரகசிய பொலிஸார் தொலைபேசி விபரங்கள் மற்றும் கணக்கறிக்கைகளுக்கு அமைய தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விசாரணை அறிக்கைகளை பாதுகாப்பாக வைக்குமாறு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட உத்தரவை பிறப்பித்த நீதவான் விசாரணை மேற்கொள்ளப்படும் எதிர்வரும் 18ம் திகதி அன்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் அறிவித்தார்” என அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers