சட்டவிரோதமாக ஆயுர்வேத வைத்தியசாலையினை நடத்தி சென்ற வைத்தியர் ஒருவர் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் நகரில் ஆயுர்வேத திணைக்களத்தின் அனுமதியினை பெறாது ஆயுர்வேத வைத்தியசாலையினை நடாத்தி சென்ற வைத்தியர் ஒருவர் ஹட்டன் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய டிக்கோயா பகுதியை சேர்ந்த வைத்தியரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆயுர்வேத நிலையம் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளது.

இதன்போது ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர்கள், விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இதற்கு முன்பு குறித்த ஆயுர்வேத வைத்திய நிலையத்தினை நடத்தி வந்த வைத்தியர் ஒருவரினால் பெறபட்ட அனுமதியினை வைத்து குறித்த நபர் ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் அனுமதியை பெறாது வைத்திய நிலையத்தினை நடத்தி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை கைது செய்யபட்ட ஆயுர்வேத வைத்தியர் ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வைத்திய நிலையத்தில் பயன்படுத்தி வந்த ஆயுர்வேத மருந்து வகைகள் மற்றும் உபகரணங்கள் என்பன மீட்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers