கண்டி பேரணியில் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய கொடி!

Report Print Murali Murali in சமூகம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் பொதுபலசேன அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய கொடி குறித்து முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.டி.இ.சாமிலன் இதனை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முறைப்பாடுகள் எவையும் கிடைக்கவில்லை என பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் பொதுபலசேனா அமைப்பு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியது. இதில் ஏராளமாக பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்கள் திரிபுப்படுத்தப்பட்ட தேசியக் கொடியினை பயன்படுத்தியிருந்தனர். சிலர் பேரணியின் முடிவில் மேடையில் ஏறி குறித்த கொடியினை அசைத்து ஆரவாரம் செய்திருந்தனர்.

குறித்த அந்த கொடியில் இலங்கையில் சிறுபான்மையினரைக் குறிக்கும் பச்சை மற்றும் செம்மஞ்சள் வண்ண கோடுகள் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers