மீண்டும் தமிழ் மக்கள் பேரவை எழுச்சி பெறும் வகையில் பல தீர்மானங்கள்

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

மீண்டும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகள் எழுச்சி பெறும் வகையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான பிரத்தியேக சந்திப்பொன்று பேரவையின் இணைத்தலைவரின் இல்லத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களைப் பொருத்தவரையில் இன்றைய நிலையில் உள்ள பாரிய பிரச்சினையாக அமைவது காணி பிரச்சனையாகும். பொதுமக்கள் குடியிருக்கப்படும் காணி தொழில் செய்யவேண்டிய காணிகள் அநேகமானவை பெரும்பாலும் இராணுவப்படையினரின் கைவசம் இருக்கின்றது.

அதேபோன்று நில அளவை திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் , மற்றும் வனவிலங்கு இலாகா திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் மூலமாக பொதுமக்கள் குடியிருக்க அவர்கள் தொழில் செய்ய முடியாத வகையில் காணிகளை எடுத்து வைத்திருக்கின்றார்கள்.

அதேநேரம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்களது காணிகளும், இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து போன மக்களது காணிகளும் தற்போது படையினரிடமும், வேறு சில நபர்களிடமும் போய்ச்சேர்ந்திருக்கின்றது.

இந்த காணிகள் அனைத்தும் உரிய மக்களிடம் போய் சேரவேண்டும் என்பதே எல்லோருடைய கருத்தாகவும் விருப்பமுமாக அமைகின்றது.

வடகிழக்குப்பகுதிகளில் உள்ள மக்களது காணிகள் எவ்வளவு படையினர் வசமுள்ளது அல்லது வேறு திணைக்களங்களிடம் உள்ளது என்ற விபரங்கள் அதாவது காணிகளின் அளவுகள் புள்ளிவிபரத் தகவல்கள் எம்மிடம் இல்லை. அதனடிப்படையிலேயே இறுதியாக நடைபெற்ற சந்திப்பின் போது காணி விடயங்கள் தொடர்பான உபகுழு ஒன்றிணை உருவாக்கியுள்ளது.

கேள்வி :- கடந்த 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையில் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வின் பின்னர் மக்கள் மத்தியில் எவ்வாறான மனநிலை உள்ளது?

பதில் :- எழுக தமிழ் நிகழ்ச்சியின் போது மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி இருந்தது. வடக்கிலும் இருந்தது கிழக்கிலும் இருந்தது ஆனால் அந்த எழுர்ச்சி நிகழ்வின் பின்னர் தமிழ் மக்கள் பேரவை பாரிய அளவிலான நிகழ்வுகளை நடாத்தவில்லை. என்பது வெளிப்படையான உண்மை ஆனால் அண்மையில் நடைபெற்ற பேரவையின் சந்திப்பின் போது இணைத்தலைவர்களின் ஒருவரான முன்னாள் நீதியரசர் சீ.வீ விக்னேஸ்வரன் ஜயா அவர்கள் கூறியிருந்தார்.

தமிழ் மக்கள் பேரவை மீண்டும் எழுர்ச்சி பெற செய்ய வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஆலோசனையில் அடிப்படையிலே தமிழ் மக்கள் பேரவை பல காரியங்களை செய்வதற்கு திட்டமிட்டிருக்கின்றார்கள்.

கேள்வி :- கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமை தொடர்பாக விவகாரத்தில் தமிழ் மக்கள் பேரவை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன கருத்துக்கள் என்ன?

பதில் :- அப்பிரதேச மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயரத்தப்பட்டு சேவையை செய்ய வேண்டுமென்பது தமிழ் மக்கள் பேரவையின் அவா.

உண்மையிலேயே 1989 ஆம் ஆண்டு இலங்கையில் 28 உப பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்ட போது கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் ஒன்று ஆனால் 1993 ஆம் ஆண்டு இந்த 28 பிரதேச செயலகமும் தரமுயர்த்தப்பட்டது என கூறப்பட்டது.

அந்த நேரத்தில் இருந்த மந்திரிசபை தெரிவித்திருந்தது ஆனால் அந்த தரமுயர்த்தலுக்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருசாரார் தடை ஒன்றை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தமையாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது.

சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளுக்கு மற்றுமொரு சிறுபான்மை இனம் தடை விதிக்காமல் இருப்பது தான் சாத்தியம். காரணம் சிறுபான்மை இனத்தவர்கள் ஒன்றிணைத்தால் தான் அவர்களது பொதுவான பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும்.

கல்முனை விடயத்தில் ஒரு மாறுபட்ட காரியமாக இருப்பது மனவருத்தத்திற்குரிய விடயம் ஆகவே இப்பிரச்சினைக்கு அனைவரும் ஒன்றிணைந்து அப்பிரதேச செயகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் தமிழ் மக்கள் பேரவை பூரண ஆதரவாக அமையும், அத்துடன் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி முன்வரும் இந்த பௌத்த மதத்தைச் சேர்ந்த பிக்குகள் தேரர்கள் ஆதரவு தெரிவிப்பது என்பது எவ்வளவு தூரம் சரி பிழை என்பது எம்மால் தீர்மானிக்க முடியாத விடயமாக அமைகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers