மகன் செய்த குற்றத்திற்காக சிறை சென்ற தாய்

Report Print Vethu Vethu in சமூகம்

மாத்தளையில் மகன் செய்த குற்றத்திற்காக தாய் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கனேமுல்ல, வேவெல்கார பிரதேசத்தில் மகன் நபர் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டில் மகன் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி தாய் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதற்கமைய குறித்த தாயாரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் டீ.ஏ.ருவன் பத்திரன உத்தரவிட்டுள்ளார்.

கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சேபாலிக்கா மிஹிதுகுலசூரிய என்ற பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பணப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்ற நபரை மகன் கத்தியால் குத்தியுள்ள நிலையில், மகனின் கையில் இருந்த கத்தியுடன் தாய் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார்.

காயமடைந்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கத்தியால் குத்தியது மகன் என தெரியவந்துள்ளது.

Latest Offers